தமிழகத்தில் சில தளர்வுகள் அமலுக்கு வந்தபோதிலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், பேருந்து போக்குவரத்து, தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கும் தடை தொடர்கிறது.
தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நோய் தொற்று பரவலை தடுக்க ஏற்கெனவே விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை, வணிக வளாகங்கள், திரையரங்குகள் இயங்குவதற்கான தடை தொடர்கிறது. உணவகங்களில் பார்சல்களுக்கான அனுமதி நீடிக்கிறது. தேனீர் கடைகள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மத வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான தடையும் நீடிக்கிறது. சலூன் கடைகள், டாஸ்மாக் கடைகளுக்கான தடையும் தொடர்கிறது. திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம். இறப்பு நிகழ்ச்சியில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் அது சார்ந்த துறைகளின் ஊழியர்கள் அலுவலகம் சென்று பணியாற்ற விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை. கூரியர் உள்ளிட்ட தபால் சேவைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங்கில் உணவு மற்றும் பொருள்கள் வினியோகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3g8Elmoதமிழகத்தில் சில தளர்வுகள் அமலுக்கு வந்தபோதிலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், பேருந்து போக்குவரத்து, தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கும் தடை தொடர்கிறது.
தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நோய் தொற்று பரவலை தடுக்க ஏற்கெனவே விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை, வணிக வளாகங்கள், திரையரங்குகள் இயங்குவதற்கான தடை தொடர்கிறது. உணவகங்களில் பார்சல்களுக்கான அனுமதி நீடிக்கிறது. தேனீர் கடைகள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மத வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான தடையும் நீடிக்கிறது. சலூன் கடைகள், டாஸ்மாக் கடைகளுக்கான தடையும் தொடர்கிறது. திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம். இறப்பு நிகழ்ச்சியில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் அது சார்ந்த துறைகளின் ஊழியர்கள் அலுவலகம் சென்று பணியாற்ற விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை. கூரியர் உள்ளிட்ட தபால் சேவைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங்கில் உணவு மற்றும் பொருள்கள் வினியோகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்