தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 20,421 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 434 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 33,161 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 2,44,289 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட 20,421 பேரில் மூன்று பேர் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். ஜார்க்கண்ட், கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்திலிருந்து வந்திருந்த தலா ஒருவர் இதில் அடங்குவர்.
தலைநகர் சென்னையில் 1,644 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 2645 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
11,227 ஆண்களும், 9,194 பெண்களும் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்