Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

2000 ரூபாய் நோட்டு கலர் ஜெராக்ஸ்: திருத்தணியில் ஆடு வியாபாரியிடம் ரூ.64,000 மோசடி

https://ift.tt/3vOIdyJ

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஆடு வியாபாரியிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கலர் ஜெராக்ஸை கொடுத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து, அவருக்கு சொந்தமான 30 ஆடுகளை மேய்த்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முனுசாமியிடம் ஆட்டோவில் வந்த ஒரு ஆண், பெண் மற்றும் ஆட்டோ டிரைவர் என 3 பேர் சென்று பக்ரீத் பண்டிகைக்காக செம்மறி ஆடுகள் தேவைப்படுவதாக கூறியுள்ளனர். அவர்களது பேச்சை நம்பி ஆடு மேய்ப்பவர் அவரிடம் இருந்த செம்மறி ஆடுகளை காட்டி 4 ஆடுகளை ரூ. 64 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசியுள்ளார். அதற்கான தொகையாக 64 ஆயிரத்தை 2000 ரூபாய் தாள்கள் 32ஐ கொடுத்து, செம்மறி ஆடுகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர்.

சிறிது நேரத்தில் ஆடு மேய்ப்பவர் பணத்தை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு சென்று பணத்தைக் கட்டி உள்ளார். அதனை வாங்கி பார்த்த ஊழியர்கள் இந்தப் பணம் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலி ரூபாய் தாள்கள் என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இது தொடர்பாக கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து செம்மறி ஆடுகளை நூதன முறையில் ஓட்டிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்