முதலமைச்சராக இருந்த ஒருவரின் மகன் அதே பதவியில் அமரும் நிகழ்வு தமிழகத்தில் முதல் முறையாக தற்போது அரங்கேறியுள்ளது
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தவர்களின் பிள்ளைகளும் அதே பதவியில் இருந்துள்ளனர். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. காஷ்மீரின் முதல்வராக 1950களில் ஷேக் அப்துல்லா இருந்த நிலையில் அவரது மகன் ஃபரூக் அப்துல்லாவும் பேரன், ஓமர் அப்துல்லாவும் அம்மாநிலத்தின் முதலமைச்சர்களாக இருந்துள்ளனர். அதாவது ஒரே மாநிலத்தை தாத்தா, மகன், பேரன் என 3 பேர் நிர்வகித்துள்ளனர். இதே மாநிலத்தில் முஃப்தி முகமது சையது முதலமைச்சராக இருந்த நிலையில் அவரது மகள் மெகபூபா முஃப்தியும் அதே பதவியை அங்கு வகித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் என்டி ராமராவும் அவரது மருமகன் சந்திரபாபு நாயுடுவும் முதலமைச்சர்களாக இருந்துள்ளனர். இதே மாநிலத்தில் ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த நிலையில் அவரது மகன் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி தற்போது முதலமைச்சராக உள்ளார். உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவும் அவரது மகன் அகிலேஷ் யாதவும் முதலமைச்சர்களாக இருந்துள்ளனர்.ஹரியானாவில் தேவிலாலும் அவரது மகன் ஓம் பிரகாஷ் சவுதாலாவும் முதலமைச்சர்களாக இருந்துள்ளனர். ஒடிசாவில் பிஜு பட்நாயக் முதலமைச்சராக இருந்த நிலையில் அவரது மகன் நவீன் பட்நாயக் தற்போது முதல்வராக உள்ளார். மகாராஷ்டிராவில் சங்கர் ராவ் சவானும் அவரது மகன் அசோக் சவானும் முதலமைச்சர் பதவியை வகித்துள்ளனர்.
தமிழகத்தில் எம்ஜிஆருக்கு பின் அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரன் சில மாதங்கள் முதல்வராக இருந்தார். ஆனால் முதலமைச்சராக இருந்தவரின் மகன் அதே பதவியில் அமர்வது தமிழகத்தில் தற்போதுதான் முதல்முறையாக அரங்கேறியுள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்