சீனா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியான சினோபார்மை, அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
சினோபார்ம் தடுப்பூசி பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றிற்கான உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தை பெறும் ஆறாவது தடுப்பூசி என்று, ஐ.நா. சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார். பைஸர், மாடர்னா, ஸ்புட்னிக், கோவாக்சின், அஸ்ட்ராஜெனகா ஆகிய தடுப்பூசிகளுக்கு ஏற்கெனவே உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
சினோபார்ம் தடுப்பூசியானது இலங்கை, அமீரகம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக ஏற்கெனவே சீனாவில் இருந்து அந்நாடுகளுக்கு சினோபார்ம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சீனா தயாரித்துள்ள மற்றொரு தடுப்பூசியான சினோவாக்-கிற்கும் உலக சுகாதார நிறுவனம் ஓரிரு நாளில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்