கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பத்திரிகையாளர் நல திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஐந்து லட்ச ரூபாய் கொடுக்க முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பத்திரிகையாளர் நல திட்ட கமிட்டியின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பத்திரிகையாளரின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தங்களது வருத்தத்தையும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிதியுதவி அனைவருக்கும் விரைவில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்