"எதிர்வரும் ஐபிஎல் சீசன் திட்டமிட்டபடி நடக்கும்" என உறுதி அழைத்துள்ளார், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி. கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாம் அலை தீவிரத்தால், ஐபிஎல் தொடரை நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ள சூழலில், அவர் இவ்வாறு கூறியிருப்பது கவனத்துக்குரியது.
மும்பையில் இந்த சீசனின் முதல் சில லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இருப்பினும் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகம் உள்ளது. அதன் காரணமாக மாநில அரசு பல்வேறு வழிகாட்டு விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில், “அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும்” என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல், பெங்களூரு அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல், சென்னை அணியின் நிர்வாகி ஒருவர் மற்றும் மும்பை மைதானத்தின் ஊழியர்கள் என ஐபில் தொடரோடு தொடர்பில் உள்ளவர்கள் சிலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தொடர் மும்பைக்கு மாற்றாக வேறேதேனும் மைதானத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கங்குலி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்