மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிதீவிரமடைந்துள்ளதை அடுத்து, இன்று முதல் (திங்கள்கிழமை) இரவு நேரத்திலும், சனி - ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. 2020 கொரோனா முழு அடைப்பு காலம் மீண்டும் திரும்பும் வகையில், மகாராஷ்டிராவில் இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது.
நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்துள்ளது. முக்கியமாக, கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சோ்ந்தவா்களாக உள்ளனர். இதையடுத்து, புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து கடந்த சில நாள்களாகவே முதல்வர் உத்தவ் தாக்கரே தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு புதிய கட்டுப்பாடுகளை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை இரவு 8 மணியில் இருந்து காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் தகுந்த காரணம் இல்லாமல் வெளியில் வர அனுமதிக்கப்படாது. அவ்வாறு வந்தால் அபராதம் விதிக்கப்படும்.
இது தவிர பகல் நேரத்தில் 5 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி கூடினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞயிற்றுக்கிழமைகளில் முழுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்.
வரும் 30ம் தேதி வரை காய்கறிக்கடை, மருந்துக்கடை, மளிகைக்கடைகள் மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். மற்ற அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்படும். திறந்திருக்கும் கடை ஊழியர்கள் விரைவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
சினிமா தியேட்டர்கள், மால்கள், மல்டிபிளக்ஸ், நீச்சல் குளங்கள், வாடர் பார்க், வீடியோ பார்லர், ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ், ஜிம்கள், வழிபாட்டுத் தலங்கள், சலூன்கள், பார்கள் அடைக்கப்பட்டு இருக்கும். தனியார் அலுவலங்களும் அடைக்கப்படும். பைனான்ஸ் மற்றும் வங்கி சார்ந்த தனியார் அலுவலகங்கள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
உணவகங்கள் காலை 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பார்சல்கள் கொடுக்க மட்டுமே அனுமதிக்கப்படும். அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் டெலிவரி காலை 7 மணியில் இருந்து மாலை 8 மணி வரை மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படும்.
தொழிற்சாலைகள், கம்பெனிகள் மற்றும் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். பொது போக்குவரத்து தொடர்ந்து அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்