தங்கள் வாழ்வாதராத்தை காத்துக்கொள்ள ஈமசடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலாவது கலந்து கொள்ள அனுமதிக்குமாறு திருவள்ளூர் தெருக்கூத்து கலைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டதால் கிராமிய தெருக்கூத்துக் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை கடத்த பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மதம் சார்ந்த மற்றும் திருவிழா கூட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் தெருக்கூத்து கலைஞர்கள் மீண்டும் பிரச்னையை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆகையால் இந்தச் சிக்கலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள ஈமசடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மட்டுமாவது கலந்து கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கிராமிய தெருக்கூத்து கலைஞர்கள் மற்றும் சங்க நபர்கள் குறத்தி, பபூன், துரியோதனன், காளி உள்ளிட்ட வேடங்கள் அணிந்து ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வித்யாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அரசின் ஆலோசனையை பெற்ற பிறகு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்ததையடுத்து கிராமியக் கலைஞர்கள் அங்கிருந்து சென்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்