Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

”டீ விற்றவர் மோடி; விவசாயி மகனாக பிறந்தவர் பழனிசாமி!” - நெல்லையில் அமித் ஷா பேச்சு

https://ift.tt/3ukf8uQ

தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று நெல்லையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”டீ விற்றவர் மோடி; விவசாயி மகனாக பிறந்தவர் பழனிசாமி” என்றார்.

நெல்லை சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் கணேசராஜா ஆகியோரை ஆதரித்து நெல்லை மாவட்ட பாஜக சார்பில் தச்சநல்லூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “கோயில் நகரமாகிய திருநெல்வேலிக்கு வந்திருப்பதால் நான் பெருமை அடைகிறேன். இந்த பூமி தர்ம பூமி; மோட்ச பூமி. இந்த மண் பாரதியார், வ.உ.சி. பூலித்தேவன், சுந்தரலிங்கனார், ஒண்டிவீரன், வீரபாண்டிய கட்ட பொம்மன் ஆகிய சுதந்திரப்போராட்ட வீரர்கள் வாழ்ந்த மண். இவர்களைப் பற்றி செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறேன். தமிழக சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு செய்து எம்ஜிஆரின் ஆட்சியை கொண்டுவர வேண்டும்.

Image

மோடி தலைமையில் தேசிய ஜனயாக கூட்டணி, அதேசமயம் ராகுல் தலைமையில் முற்போக்கு கூட்டணி இடையேதான் போட்டி. பிரதமர் மோடி சாதாரணமாக டீ விற்று உலகமே பாராட்டும் பிரதமராக உயர்ந்துள்ளார். அதேபோல் சாதாரண ஏழை விவசாயி மகனாக பிறந்து தனது உழைப்பால் முதல்வராக ஆனவர் எடப்பாடி பழனிச்சாமி.

காங்கிரஸ் 4ஜி போன்று நான்கு தலைமுறைகளாக இந்த தேசத்தில் ஆட்சி செய்து வருகிறார்கள். மக்களாட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் நடைபெறும் யுத்தம்தான் இந்த தேர்தல். இன்னொரு குடும்பம் உள்ளது தமிழகத்தில். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி 3 ஜி குடும்பம். உதயநிதியை முதல்வராக்க முயற்சி செய்யும் கட்சி திமுக. அது குடும்பக் கட்சி, பணக்காரக் கட்சி. ஆனால் பாஜக ஏழைகளை மையமாக வைத்து வளர்ந்துள்ளது. பிரதமருக்கு மீனவர்கள், விவசாயிகள், ஏழைகள் பற்றி கவலை. ஆனால் ஸ்டாலினுக்கு தனது மகனை பற்றி மட்டும்தான் கவலை. ஸ்டாலினிடம் கோபமும் ஊழலும் வளர்ந்து வருகிறது. தமிழகத்தின் பெருமை, இறந்தவர்களை விமர்சிப்பது கிடையாது. ஆனால் திமுகவில் இறந்த பெண்மணியான முதல்வரின் தாயாரை கேவலமாக பேசும் அளவுக்கு அந்த கட்சி உள்ளது.

எனவே வரும் தேர்தலில் பெண்கள் ஒரு ஓட்டு கூட திமுகவுக்கு போடாமல் தாமரையை வெற்றி பெற செய்ய வேண்டும். நாட்டின் பிரதமரும் தமிழக முதல்வரும் சாதாரண மக்களை பற்றி கவலைப்படக் கூடியவர்கள். விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் ஆட்சி பாரதிய ஜனதா ஆட்சி. விவசாயிகள் கடனை ரத்து செய்து தமிழக முதல்வர் சாமானிய மக்களின் ஆட்சியை செய்து வருகிறார். நாட்டின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியில் தலித் சமூகத்தவரை வைத்து அழகு பார்க்கும் கட்சி பாஜக. நான் நரேந்திரன், நீஙகள் தேவேந்திரன் என பிரதமர் கூறினார். பல்வேறு பிரிவுகளாக இருந்த சமூகத்தினரை ஒரே பிரிவாக தேவேந்திரகுல வேளாளர் என மாற்றினார் பிரதமர். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் வந்தபோது திமுகவும் காங்கிரசும் வெளியேறியது. இருப்பினும் அந்த திட்டத்தை நிறைவேற்றி பெருமை சேர்த்து கொடுத்தவர் மோடி.

Image

10 ஆண்டுகளாக சாதாரண மக்களுக்கான ஆட்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி தமிழ் மொழி மீது ஈடுபாடு கொண்டவர். உலகத்தின் அனைத்து நாடுகளுக்கும் தமிழின் பெருமையை பறைசாற்றியவர். மீண்டும் காங்கிரஸ் - திமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு தடை செய்து விடுவார்கள். 2014ல் மோடி பொறுப்பேற்ற பிறகு மீனவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. உலகத்தின் எந்த சக்திகளுக்கும் நமது தமிழக மீனவர் மீது தாக்குதல் நடத்த தகுதி இல்லை. தமிழக முதல்வரும் துணை முதல்வரும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள்.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க மோடி தனது பட்ஜெட்டில் ஒரு லட்சம் கோடி ஒதுக்கியுள்ளார். சென்னை மெட்ரோ ரயிலுக்கு ரூ.30,000 கோடி ஒதுக்கியுள்ளார். சாகர்மாலா திட்டத்துக்கு 2.15 லட்சம் கோடி ஒதுக்கி 107 மையங்கள் அமைத்த ஆட்சி பாஜக. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தவர் பிரதமர் மோடி.

ஒட்டுமொத்த தமிழகத்தின் முழு வளர்ச்சிக்கும் அதிமுக - பாஜக பாடுபடுகிறது. ஆனால் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் கட்சி காங்கிரசும் திமுகவும். நாட்டுக்காக பாடுபடும் கட்சியா அல்லது குடும்பத்திற்காக பாடுபடும் கட்சியா? என வேறுபாட்டை உணர்ந்து அதிமுக - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்து அதிமுக மற்றும் எம்ஜிஆர் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும்” என்றார் அமித் ஷா.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்