Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

“6 நாட்கள்தான் பரப்புரை; ஏனென்றால் சேப்பாக்கம் கருணாநிதி தொகுதி” : உதயநிதி

https://ift.tt/3upZGNP

சேப்பாக்கம் கருணாநிதி தொகுதி என்பதால் நான் வெற்றி பெற்று விடுவேன் என திமுக இளைஞரணி  செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை மாதவரம் தொகுதியின் திமுக வேட்பாளர் சுதர்சனத்தை ஆதரித்து பேசிய  உதயநிதி ஸ்டாலின் “5 வயது குழந்தை கூட யார் முதல்வராவார் என கேட்டால் ஸ்டாலின் தான் என சொல்லிவிடும். திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும். கருத்து கணிப்புகளும் திமுக தான் வெற்றி பெறும் எனக் கூறியுள்ளது. எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி, திமுக வேட்பாளர் சம்பத் குமாரிடம்  100% தோற்பது உறுதி. அதன்பின் அவர் உள்ளே போவதும் உறுதி. பாளையங்கோட்டையா? புழலா? என ஸ்டாலின் முடிவு செய்வார்” என்றார்.

image

மேலும் “தமிழகத்தின் உரிமைகளையும், மானத்தையும் மோடியிடம் அதிமுக அடகு வைத்து விட்டது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளரான நான், 6 நாட்கள் மட்டுமே அங்கு பரப்புரை செய்தேன். கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதி என்பதால் நான் வெற்றி பெற்று விடுவேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டியது அதிமுக-பாஜகவின் சாதனை எனக் கூறி வருகின்றனர். நான் மதுரைக்கு சென்று பார்த்த போது செங்கல் இருந்தது. அந்த செங்கலை எடுத்து வந்தேன். 6-ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த உடன் 7-ஆம் தேதி மருத்துவ மனையை ஒப்படைத்து விடுகிறேன்” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்