Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தவறான சிகிச்சையால் மனைவி இறந்ததாக வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு

https://ift.tt/31FfC29

தவறான மருத்துவம் பார்த்ததால் பெண் இறந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனக்கு செல்ல பிரியா என்பவருடன் 2014-ஆம் ஆண்டு திருமணமான நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2021 பிப்ரவரி 3-ஆம் தேதி எனது மனைவி செல்ல பிரியா மற்றும் எனது 2-வது மகன் இருவருக்கும் ஜலதோஷ பிரச்னை இருந்து வந்தது.

image

இதனை அடுத்து அவர்கள் இருவருக்கும் மருத்துவம் பார்க்க மடகுப்பட்டி பகுதியிலுள்ள செந்தில்குமார் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு  பிரியாவிற்கு மருத்துவர் செந்தில்குமார் 3 ஊசிகளை போட்டார். ஆனால் மூன்றாவது ஊசி போடும்போது எனது மனைவி செல்ல பிரியா மயக்கமடைந்தார்.

இதனையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால், 108 ஆம்புலன்சில் இருந்த உதவியாளர் செல்லப் பிரியா இறந்து விட்டதாகவும் அதனால் ஆம்புலன்ஸில் ஏற்ற முடியாது என மறுத்துவிட்டார். ஆனால் மருத்துவர் செந்தில்குமார் கூறியதையடுத்து ஆம்புலன்ஸில் செல்லப் பிரியாவை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருந்துவர்கள் செல்லப் பிரியா இறந்து விட்டதாகக்கூறி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து மீண்டும் மடகுப்பட்டியிலுள்ள செந்தில்குமார் கிளினிக்கிற்கு வந்து பார்த்தபோது கிளினிக் மூடப்பட்டிருந்தது.

செல்லப் பிரியா உடற்கூறு ஆய்வின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் முறையான அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, 2021 பிப்ரவரி 4ஆம் தேதி செல்லப் பிரியா இறந்தது குறித்து மடகுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நான்கு வாரங்கள் ஆகியும் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, செல்லப் பிரியா வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி தாரணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சொல்லப் பிரியா இறந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு குறித்து குற்றப்பத்திரிகையை மூன்று மாதத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்