ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பு வகித்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கவில்லை என 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது மாநில தகவல் ஆணையம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடி, தேர்வர்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.
இதனடிப்படையில், மாநில தகவல் ஆணையம் தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய அறிக்கையில், சுர்ஜித் சவுத்ரி, விபூ நாயர், ககர்லா உஷா, ஜெகநாதன், சீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்க பரிந்துரை செய்துள்ளது. 2011ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணியாற்றிய 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது தகவல் ஆணையம் புகார் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3a1pRlZஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பு வகித்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கவில்லை என 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது மாநில தகவல் ஆணையம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடி, தேர்வர்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.
இதனடிப்படையில், மாநில தகவல் ஆணையம் தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய அறிக்கையில், சுர்ஜித் சவுத்ரி, விபூ நாயர், ககர்லா உஷா, ஜெகநாதன், சீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்க பரிந்துரை செய்துள்ளது. 2011ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணியாற்றிய 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது தகவல் ஆணையம் புகார் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்