ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்றிரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
14-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. போட்டியின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடக்க ஆட்டத்தில் வென்று வெற்றி கணக்கை தொடங்க இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
கடந்த ஆண்டு அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டனாக முதல்முறையாக களம் காண்கிறார்.
3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு முதல்முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறாமல் போனதுடன் 7-வது இடத்துக்கும் தள்ளப்பட்டது. அந்த கசப்பான அனுபவத்தில் இருந்து மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது.
கடந்த சீசனில் கடைசி நேரத்தில் விலகி சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் ரெய்னா மீண்டும் திரும்பி இருப்பது சென்னை அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்தும். லுங்கி நிகிடி உள்பட 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள் தனிமைப்படுத்துதலில் இருப்பதால் இந்த ஆட்டத்தில் களமிறங்க மாட்டார்கள் என தெரிகிறது. அதேபோல் ரிஷப் பண்ட்டின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கிய வீரர்களான ரபாடா மற்றும் அன்ரிச் நோர்ஜே தனிமைப்படுத்துதலில் இருப்பதால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 15 முறையும், டெல்லி அணி 8 தடவையும் வென்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்:-
சென்னை சூப்பர் கிங்ஸ்: மொயீன் அலி அல்லது ருதுராஜ் கெய்க்வாட், பாப் டுபிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், வெய்ன் பிராவோ, கிருஷ்ணப்பா கவுதம், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவன் சுமித், ரிஷப் பண்ட் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், ஆர்.அஸ்வின், உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்