தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அது தற்காலிகமானதுதான் என தமிழக சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரத்தும் மேற்பட்ட முகாம்களில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மொத்தமாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுவதால், தனி நபர்கள் பதிவு செய்துவிட்டு காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதாகத் தெரிகிறது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை, தேவையான தடுப்பு மருத்து இருப்பில் இருந்தாலும், அது குறிப்பிட்ட மையங்களுக்கு சென்றடைவதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கோவாக்சின் தடுப்பு மருந்துக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவுவதாகவும், கோவிஷீல்டு மருந்து தொடர்ந்து கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நாளை மறுதினம் 7 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து மத்திய அரசிடமிருந்து வரவுள்ள நிலையில், நிலைமை சீராகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3dfGviEதனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அது தற்காலிகமானதுதான் என தமிழக சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரத்தும் மேற்பட்ட முகாம்களில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மொத்தமாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுவதால், தனி நபர்கள் பதிவு செய்துவிட்டு காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதாகத் தெரிகிறது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை, தேவையான தடுப்பு மருத்து இருப்பில் இருந்தாலும், அது குறிப்பிட்ட மையங்களுக்கு சென்றடைவதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கோவாக்சின் தடுப்பு மருந்துக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவுவதாகவும், கோவிஷீல்டு மருந்து தொடர்ந்து கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நாளை மறுதினம் 7 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து மத்திய அரசிடமிருந்து வரவுள்ள நிலையில், நிலைமை சீராகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்