Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இணைந்து வாழ விரும்பிய பெண்கள்... உளவியல் ஆலோசனை வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்

இரு பெண்கள் சேர்ந்து வாழும் முடிவு குறித்து அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் உளவியல் ஆலோசனை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த இருபெண்கள் தோழிகளாக பழகிவந்த நிலையில், நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர்கள் இணைந்து வாழவிரும்பிய நிலையில், இந்த முடிவுக்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனிடையே மதுரையிலிருந்து சென்னை வந்த பெண்கள் தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கிவேலை தேடி வந்துள்ளனர். மேலும் பாதுகாப்புக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தனர்.

image

அந்த வழக்கில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால், வழக்குக்கு தொடர்புடைய நபர்கள், காவலர்கள் என அனைவரையும் ஆஜராகுமாறு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு, வழக்கை விசாரித்தார்.

image

இந்த விசாரணையில், LGBTQIA என்று சொல்லப்படும் ஒரே பாலினத்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது தொடர்பான வழக்குகளில் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். இதற்கிடையில் மனுதாரர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் கருத்துகளை விவரமாக தீர்ப்பில் சேர்க்க ஏதுவாக, அனைவரிடமும் உளவியல் கருத்துக்களை பெற வேண்டியது அவசியம்.

ஆகையால் உளவியல் நிபுணர் வித்யா தினகரன் என்பவரை நியமித்து, உளவியல் ரீதியாக அணுகி அதன் அறிக்கையை ஏப்ரல் 26ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3m7x2ho

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்