சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாகி உள்ளது. கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது.
இந்தநிலையில் மற்றொரு முக்கிய கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. தேமுதிக மூத்த நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் தங்கமணியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தேமுதிக தரப்பில் 30 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், அதிமுக தரப்பில் 14 தொகுதிகள் வரை மட்டுமே வழங்க முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷிடம் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். இந்தமுறையும் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கையில் தேமுதிக இறங்கும் எனத் தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்