Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தனிச் சின்னத்தில்தான் போட்டி என உறுதியாக இருக்கிறது மதிமுக. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் அந்த கட்சி போட்டியிட்ட இடங்கள், அதன் செல்வாக்கு என்ன?

திமுகவிலிருந்து பிரிந்து உருவான இயக்கமான மதிமுக, முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தது, 1996ஆம் ஆண்டில்தான். அப்போது வைகோ அமைத்த கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இருந்தன. மதிமுக 177 தொகுதிகளில் போட்டியிட்டது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. வாக்கு சதவீதம் 5 புள்ளி 78. 2001ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் 211 தொகுதிகளில் தனித்து களமிறங்கிய நிலையில் அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியையே சந்தித்தது. வாக்கு சதவீதம் 4.65

image

சிறிய கட்சிகளுடன் கூட்டணி, தனித்துப் போட்டி போன்ற வியூகங்கள் கைகூடாததால் 2006 தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர்ந்தது மதிமுக. இம்முறை 35 தொகுதிகளில் போட்டியிட்டதில் 6 இடங்கள் கிடைத்தன. வாக்கு சதவீதம் 5.98. 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் ஏற்பட்ட தொகுதிப்பங்கீடு சிக்கலால் கடைசிநேரத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார் வைகோ.

2016ஆம் ஆண்டு திடீர் திருப்பமாக, வைகோவின் முயற்சியால் விஜயகாந்த் தலைமையில் உருவானது மக்கள் நலக் கூட்டணி. பெரிதும் பேசப்பட்ட இந்த கூட்டணியில் 29 தொகுதிகளில் மதிமுக போட்டியிட்டது. ஆனால் எதிலும் வெற்றிப் பெறவில்லை. வாக்கு சதவீதம் 0.86 இம்முறை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு கடைசியில் 8 என்ற எண்ணிக்கையில் நிற்கிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாமே என்ற கோரிக்கையை ஏற்காத அக்கட்சி, தனிச்சின்னத்தில்தான் போட்டி என்பதில் தீர்க்கமாக உள்ளது.

image

வரும் தேர்தலில் 5 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கீடு செய்ய திமுக முன்வந்திருப்பதே மதிமுகவின் அதிருப்திக்கு காரணம். இதற்காக திமுக முன்னாள் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வைகோவை சந்தித்து சமாதான முயற்சியிலும் ஈடுபட்டனர். அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளில் திமுக-மதிமுக இடையே உடன்பாடு ஏற்படும் என்பதே இரு கட்சியினரின் எண்ணமாக உள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3b8SrTj

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்