அதிமுகவுக்காக கடினமாக உழைத்தேன்; ஆனாலும் சீட் இல்லை என அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் அதிமுக-வின் வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தங்கள் தொகுதிகளில் சீட் கிடைக்காத எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியின் சட்டபேரவை உறுப்பினரும், அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
’’கடந்த 10 ஆண்டுகாலமாக இந்த இயக்கத்தில் பணியாற்றும் வாய்ப்பை புரட்சித்தலைவி அம்மா எனக்கு வழங்கினார். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராகவும் அம்மா என்னை நியமித்தார். வருவாய்த்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய தொகுதியான பெருந்துறையில்தான் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சார திட்டம் போன்ற மிகப்பெரிய சிறப்பான திட்டங்களை அம்மா வெளியிட்டார். அடுத்த தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது.
அம்மா மறைவுக்குப் பிறகு, இந்த தேர்தலில் எனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எதனால் எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என எனது தொகுதி மக்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள்’’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்