தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
கொரோனா காரணமாக வேட்பு மனு தாக்கலுக்கு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வர வேண்டும், 2 வாகனங்களில் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களை ஆன்லைனில் பெற்று அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மனு தாக்கல் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 19ஆம் தேதி கடைசி நாளாகும். 20ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற வரும் 22ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3tbyK3vதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
கொரோனா காரணமாக வேட்பு மனு தாக்கலுக்கு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வர வேண்டும், 2 வாகனங்களில் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களை ஆன்லைனில் பெற்று அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மனு தாக்கல் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 19ஆம் தேதி கடைசி நாளாகும். 20ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற வரும் 22ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்