இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் இறுதியில் இந்தியா வரஉள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் இறுதியில் இந்தியா வருகிறார். பிரெக்ஸிட் கூட்டமைப்பு நாடுகளின் பயணத்திற்கு பிறகு, போரிஸ் மேற்கொள்ள இருக்கும் முக்கியமான பயணமாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது. இந்தியா இங்கிலாந்து இடையேயான வர்த்தக தொடர்பான உறவுகளை வலுப்படுத்தவும், குறிப்பாக வேலைவாய்ப்பு அதிகரிப்பு, முதலீடுகளை ஈர்த்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இந்தச் சந்திப்பில் இடம்பெறும் எனத் தெரியவருகிறது. போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்ற பிறகு, முதன் முறையாக இந்தியா வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக குடியரசு தினத்தன்று சிறந்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் இந்தியா வர இருந்தார். ஆனால், இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தால் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்