பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலில் எஞ்சியுள்ள பெயர்களையும் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வேட்பு மனு தாக்கல் செய்யும் பணியையும் தொடங்கிவிட்டன. ஆனால் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய தேசிய கட்சிகள் மட்டும் தங்கள் வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிடவில்லை.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தான் போட்டியிடும் 25 தொகுதிகளில் 21க்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. குளச்சல், விளவங்கோடு, மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய 4 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. இதோடு புதுச்சேரியில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர்களையும் அறிவிக்க வேண்டியுள்ளது.
தமிழகத்தில் பாரதிய ஜனதா 20 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் 17 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. உதகமண்டலம், விளவங்கோடு, தளி ஆகிய 3 தொகுதி வேட்பாளர்களை பாஜக இன்று அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்