Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மிரட்டிய புவனேஸ்வர்குமார்.. பாய்ந்து பின் பணிந்த இங்கிலாந்து: தொடரை வென்றது இந்திய அணி!

https://ift.tt/2NzJPwa

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 - 2 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் கை கொடுத்தது பேட்டிங் தான். ரோகித், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா என இந்தியாவுக்காக களம் இறங்கிய நான்கு பேட்ஸ்மேன்களும் அபாரமாக விளையாடினர். அதன் விளைவாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 224 ரன்கள் எடுத்தது. 

இரண்டாவது பாதியில் பெரிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரின் இரண்டாவது பந்தே அதிர்ச்சியாக அமைந்தது. ஜேசன் ராய், புவனேஷ்வர் குமாரின் வேகத்தில் சரிந்தார். இருந்தாலும் டேவிட் மாலன் மற்றும் பட்லர் பார்ட்னர்ஷிப் இங்கிலாந்துக்கு நம்பிக்கையை கொடுத்தது. இருவரும் 130 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அப்போது வெற்றி இங்கிலாந்து அணியின் பக்கம் சென்றுவிட்டதோ என்று கூட தோன்றியது. அப்படியொரு அதிரடியை இருவரும் ஆடினர். யார் பந்துவீசினாலும் சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்டனர். நடராஜன் ஓவரையும் விட்டுவைக்கவில்லை.

அவர்களது  பார்ட்னர்ஷிப்பை புவனேஷ்வர் குமார்தான் உடைத்தார். ஷர்துல் தாகூரும் சரியான நேரத்தில் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். அதன் பிறகு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கிரீசுக்கு வருவதும், போவதுமாக இருந்தனர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அதன் மூலம் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றிக்கு இந்திய பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சு பெரிதும் கைகொடுத்தது. 4 ஓவர் வீசி 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் அவர். அதில் 17 டாட் பால்களும் அடங்கும். 

அடுத்ததாக இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து இழந்திருந்தது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்