Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இசக்கி சுப்பையா, எம்.கே.மோகன், கமல் : தமிழகத்தின் டாப் 5 கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலை பார்க்கலாம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்பு கொண்டவராக இசக்கி சுப்பையா உள்ளார். அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அவரது சொத்து மதிப்பு 246 கோடியே 73 லட்சம் ரூபாயாக உள்ளது. அடுத்ததாக சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்எல்ஏ எம்.கே.மோகன் 211 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு அவரது சொத்துமதிப்பு 170 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது. மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசனுக்கு 176 கோடி ரூபாய் மதிப்பிலும், அதே கட்சியின் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் மகேந்திரனுக்கு 161 கோடி ரூபாய் மதிப்பிலும் சொத்து உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

image

கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற பணக்காரர்கள் என பார்த்தால் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த மறைந்த வசந்தகுமார் 337 கோடி ரூபாய் சொத்து கொண்டிருந்தார். அடுத்ததாக அண்ணா நகர் தொகுதி திமுக எம்எல்ஏ எம்.கே.மோகன் 170 கோடியில் சொத்து மதிப்பு வைத்திருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகையில் 113 கோடி சொத்து மதிப்பு இருந்ததாக வேட்புமனுவில் கூறியிருந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/391kSkC

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்