அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 26 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
126 தொகுதிகளைக் கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு இம்மாதம் 27, ஏப்ரல் 1 மற்றும் 6-ஆம் தேதி என 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகின்றது. இதில் காங்கிரஸ் தலைமையில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. தேர்தலில் களம் காணும் 26 வேட்பாளர்களைக் கொண்ட மூன்றாவது பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. முன்னதாக 43 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய 2 பட்டியல்களை அக்கட்சி அறிவித்துவிட்டது.
இதனிடையே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்துவிட்டனர். முன்னாள் துணை சபாநாயகரான திலிப் குமார் பால் மற்றும் எம்.எல்.ஏ ஷிலாதித்யா தேவ் ஆகிய இருவரும் தங்களுக்கு எதிராக பாரதிய ஜனதாவில் சதி நடந்திருப்பதாகக் கூறி, காங்கிரஸில் ஐக்கியமாகினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்