Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கடும் அதிருப்தி: ஐசிசி தலைமை செயல் அதிகாரி மீது நடவடிக்கை!

ஐசிசி தலைமை செயல் அதிகாரி மனு சாவ்னே மீது புகார்களும் அதிருப்திகளும் எழுந்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐசிசி தலைமை செயல் அதிகாரியாக 2019- ஆம் ஆண்டில் டெல்லியைச் சேர்ந்த 56 வயதான மனு சாவ்னே நியமிக்கப்பட்டார். கொரோனா காலக்கட்டத்தில் மனு சாவ்னேவின் நடவடிக்கைகள் ஐசிசியின் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ஊழியர்களிடம் அவர் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தன.

இதனையடுத்து துபாயில் உள்ள ஐசிசி தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களில் 90 சதவீதம் பேர் அவருக்கு எதிராக விசாரணை கமிட்டியிடம் புகார் தெரிவித்துள்ளனர். மற்ற விவகாரங்களிலும் அவரது அணுகுமுறை திருப்திகரமாக இல்லாததையடுத்து அவரை ஐசிசி தலைமை கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்துள்ளது. அவர் மீண்டும் இந்த பணியை தொடர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2N7mjqf

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்