திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிடும் முடிவில் உறுதியாக இருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. கடந்த கால சட்டப்பேரவைத் தேர்தல்களில் அக்கட்சி பெற்றதும் கற்றதும் என்ன?
சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இரு பெரும் கூட்டணிகளிலும் இதுவரை தொகுதிப்பங்கீடு நிறைவுபெறவில்லை. திமுக கூட்டணியில் எப்படியாவது இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிடுவதுடன் கட்சிக்கு தனிச்சின்னத்தையும் பெற முனைப்பு காட்டுகிறது விடுதலைச் சிறுத்தைகள். 15 தொகுதிகள் வரை அக்கட்சி கேட்ட சூழலில் திமுக வழங்க முன்வருவது 4 முதல் 6 இடங்கள்தான் என கூறப்படுகிறது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறும் வலியுறுத்தியதாக தெரிகிறது. கேட்ட எண்ணிக்கை கிடைக்கவில்லை. எந்த சின்னத்தில் போட்டி என்பதிலும் சிக்கல். எனவேதான் இதுவரை தொகுதிப்பங்கீடு நிறைவுபெறாமல் பேச்சுவார்த்தை என்ற அளவிலேயே இருக்கிறது.
தற்போது இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிடும் முடிவில் தீர்க்கமாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, 2001-ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் 8 தொகுதிகளில் களம் கண்டது. மங்களூர் தொகுதியில் திருமாவளவன் மட்டும் வெற்றிபெற்றார். கட்சியின் வாக்கு சதவிகிதம் ஒரு சதவிகிதத்திற்கு கீழாகவே இருந்தது.
2006-ஆம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் 9 இடங்களில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் கிடைத்தன. வாக்கு சதவிகிதம் 1.29
2011-ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணிக்கு மாறிய வி.சி.க, போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. வாக்கு சதவிகிதம் 1.51
2016-ஆம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணியில் 25 இடங்களில் களமிறங்கிய விடுதலைச் சிறுத்தைகளுக்கு அனைத்து இடங்களிலும் ஏமாற்றமே கிட்டியது. வாக்கு சதவிகிதமும் 0. 77 என்ற அளவுக்கு சரிந்தது.
தேர்தல் அரசியலில் கடந்தகாலம் கற்றுக்கொடுத்த அனுபவத்தின் காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இம்முறையாவது தனி அடையாளத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் திருமாவளவன். அவரது முயற்சி கைகூடுமா என்பது அடுத்துவரும் நாட்களில் தெரிந்துவிடும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3qgZIVDதிமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிடும் முடிவில் உறுதியாக இருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. கடந்த கால சட்டப்பேரவைத் தேர்தல்களில் அக்கட்சி பெற்றதும் கற்றதும் என்ன?
சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இரு பெரும் கூட்டணிகளிலும் இதுவரை தொகுதிப்பங்கீடு நிறைவுபெறவில்லை. திமுக கூட்டணியில் எப்படியாவது இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிடுவதுடன் கட்சிக்கு தனிச்சின்னத்தையும் பெற முனைப்பு காட்டுகிறது விடுதலைச் சிறுத்தைகள். 15 தொகுதிகள் வரை அக்கட்சி கேட்ட சூழலில் திமுக வழங்க முன்வருவது 4 முதல் 6 இடங்கள்தான் என கூறப்படுகிறது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறும் வலியுறுத்தியதாக தெரிகிறது. கேட்ட எண்ணிக்கை கிடைக்கவில்லை. எந்த சின்னத்தில் போட்டி என்பதிலும் சிக்கல். எனவேதான் இதுவரை தொகுதிப்பங்கீடு நிறைவுபெறாமல் பேச்சுவார்த்தை என்ற அளவிலேயே இருக்கிறது.
தற்போது இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிடும் முடிவில் தீர்க்கமாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, 2001-ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் 8 தொகுதிகளில் களம் கண்டது. மங்களூர் தொகுதியில் திருமாவளவன் மட்டும் வெற்றிபெற்றார். கட்சியின் வாக்கு சதவிகிதம் ஒரு சதவிகிதத்திற்கு கீழாகவே இருந்தது.
2006-ஆம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் 9 இடங்களில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் கிடைத்தன. வாக்கு சதவிகிதம் 1.29
2011-ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணிக்கு மாறிய வி.சி.க, போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. வாக்கு சதவிகிதம் 1.51
2016-ஆம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணியில் 25 இடங்களில் களமிறங்கிய விடுதலைச் சிறுத்தைகளுக்கு அனைத்து இடங்களிலும் ஏமாற்றமே கிட்டியது. வாக்கு சதவிகிதமும் 0. 77 என்ற அளவுக்கு சரிந்தது.
தேர்தல் அரசியலில் கடந்தகாலம் கற்றுக்கொடுத்த அனுபவத்தின் காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இம்முறையாவது தனி அடையாளத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் திருமாவளவன். அவரது முயற்சி கைகூடுமா என்பது அடுத்துவரும் நாட்களில் தெரிந்துவிடும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்