தான் அரசியலை விட்டே ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘’நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன். நான் என்றும், பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் நன்றியுடன் இருப்பேன்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேன். ஜெயலலிதா ஆட்சி தொடர உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றவேண்டும். நம் பொது எதிரி திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபட வேண்டும். என்மீது அன்பும் அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி’’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி சென்னைக்கு வந்த தருணத்தில் கிருஷ்ணகிரியில் பேட்டியளித்த போது, ‘தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என கூறியிருந்தார். இந்த நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்