மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்றும் முனைப்புடன் உள்ள பாஜகவுக்கு பெரிய சவால் ஒன்று எழுந்துள்ளது.
மேற்குவங்கத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆளும் திரிணாமூல் காங்கிரசிலிருந்து முக்கிய பிரமுகர்கள் பாஜகவுக்கு மாறி வந்தனர். மம்தா பானர்ஜியின் வலது கரமாக திகழ்ந்த அமைச்சர் சுவேந்து அதிகாரி, முன்னாள் மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதி உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள். கடந்த சில மாதங்களில் 19 ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் உட்பட 28 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவினர். இது தவிர ஒரு எம்பியும் பாஜகவுக்கு மாறினார்.
இது தங்களுக்கு வலிமையை அதிகரிக்கும் எனக் கூறிய பாஜகவினர் திரிணாமூல் காங்கிரஸ் மூழ்கும் கப்பல் எனவும் கேலி செய்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் கட்சி மாறி வருபவர்கள் மிக அதிக அளவில் அதிகரித்த நிலையில் புதியவர்களை சேர்த்துக்கொள்ள முடியாது என மாநில பாஜக அறிவித்தது.
இந்நிலையில் மேற்கு வங்காள பாஜகவில் நீண்ட காலமாக இருந்து வருபவர்களுக்கும் தற்போது வந்துள்ள முக்கிய பிரமுகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டியிட வாய்ப்பளிப்பது, கட்சிப் பதவி அளிப்பது, பரப்புரைகளில் முக்கியத்துவம் அளிப்பது என பல்வேறு அம்சங்களில் பழையவர்களுக்கும் புதியவர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
திரிணாமூலில் இருந்து வந்தவர்களுக்கு வாக்களிப்பதை விட சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவோம் என பாஜக தொண்டர்கள் சுவரொட்டி ஒட்டும் அளவுக்கு பிரச்னை முற்றியது. ஊழலை ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் களமிறங்கியுள்ள பாஜகவில் அதே குற்றச்சாட்டுள்ள பலர் இணைந்துள்ளதும் அக்கட்சியை இக்கட்டான நிலையில் தள்ளியுள்ளது.
ஊழல் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் திரிணாமூலும் பாஜகவும் என்ற பரப்புரையை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் அணி கையெலெடுத்துள்ளது. 294 தொகுதிகளுக்கு 8 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் போட்டியிடும் நிலையில் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும்போது தற்போதைய பிரச்னைகள் பூதாகரமாக மாறும் என்றும் இதை சமாளிக்காவிட்டால் அது பாஜவின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும் என்றும் கூறுகிறார் பிரபல அரசியல் விமர்சகர் பிஸ்வநாத் சக்ரவர்த்தி. ஆனால் ஒரு குடும்பம் விரிவடையும்போது இது போன்ற பிரச்னைகள் வரத்தான் செய்யும் என்கிறார் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ். இந்தியாவிலேயே பெரிய கட்சியான பாஜக இது போன்ற சிறு பிரச்னைகளை எளிதில் சமாளிக்கும் என்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா.
பிரதமர் மோடி 20க்கும் அதிகமான பொதுக் கூட்டங்களில் உரையாற்ற உள்ள நிலையில் கோஷ்டி மோதல் பிரச்னைகள் முடிவுக்கு வரும் என மாநில பாஜக நம்புகிறது. இந்த நம்பிக்கை நிறைவேறுமா என்பது மே 2ஆம் தேதி தெரிந்துவிடும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்