Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?

https://ift.tt/3qcQhGD

பாலியல் வீடியோ சர்ச்சை விவகாரத்தில் கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. நீர்வளத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜர்கிஹோலி மற்றும் அடையாளம் தெரியாத ஒரு இளம் பெண் ஆகியோர் இடம்பெற்றதாகக் கூறப்படும் வீடியோ சி.டி.யும், இருவருக்கும் இடையிலான ஆடியோ உரையாடல்களும் செய்தித் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படுகின்றன.

அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடம் இந்த வீடியோ உண்மையானதுதான் என உறுதிசெய்யபட்டுள்ளதாக சமூக ஆர்வலர் தினேஷ் கலாஹள்ளி கூறியுள்ளார். மேலும், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பெண்ணை ஏமாற்றிய அமைச்சர் மீது பெங்களூருவில் உள்ள கப்பன் பார்க் போலீசில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறை தரப்பில் இன்னும் முறையான எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. புகாரின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்கபட்டு வருவதாக துணை போலீஸ் கமிஷனர் எம்.என். அனுச்சேத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அமைச்சர் ஜர்கிஹோலியை பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார், "இந்த விவகாரத்தில் எடியூரப்பா உரிய முடிவை அறிவிப்பார்" என தெரிவித்தார்.

image

இந்த நிலையில், அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி இன்று தனது ராஜினாமாவை முதல்வர் எடியுரப்பாவிடம் சமர்ப்பித்தார். தான் எந்தவொரு தவறையும் செய்யவில்லை என மறுத்த ரமேஷ் ஜர்கிஹோலி தனது சகோதரர் மற்றும் பாஜக எம்.எல்.ஏ பாலச்சந்திர ஜர்கிஹோலி மூலம் தார்மிக அடிப்படையில் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்.

"எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளன, உண்மையை நிரூபிக்க விசாரணை தேவை. நிரபராதி என்று நிரூபிக்கப்படுவேன் என எனக்கு நம்பிக்கை இருந்தாலும், நான் எனது ராஜினாமாவை தார்மீக அடிப்படையில் சமர்ப்பிக்கிறேன். தயவுசெய்து எனது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று முதல்வர் எடியூரப்பாவுக்கு ஜர்கிஹோலி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ராஜினாமா கடிதம் வெளியானாலும், ரமேஷ் ஜர்கிஹோலி தொடர்ந்து தலைமறைவில் இருக்கிறார். அவர் தனது தொலைபேசியை ஸ்விட்ச் ஆஃப்-பில் வைத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக பிஜேபியினர் யாரும் கருத்து சொல்லவில்லை.

60 வயதான ஜர்கிஹோலி, எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசாங்கத்தில் வடக்கு கர்நாடகாவின் பெலகாவி பகுதியைச் சேர்ந்த சக்திவாய்ந்த அமைச்சர். 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் 17 பேரை பொறிவைத்து பாஜகவின் பக்கம் இழுத்ததில் இவரது பங்கு முக்கியமானது. மேலும், அவரது இந்த செயல்பாடுதான் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி அரசாங்கத்தை கவிழ்க்கவும், 2019 ஜூலையில் பாஜக ஆட்சிக்கு வரவும் உதவியது.

அப்போதிருந்து, பாஜகவில் நுழையும் புதிய எம்எல்ஏக்கள் மற்றும் மற்ற கட்சியிலிருந்து வரும் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஒருங்கிணைப்பு புள்ளியாக செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள தனது எஸ்.டி. வால்மீகி நாயக் சமூகத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான பிரச்சாரத்தையும் அவர் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.

பெலகாவி பகுதியைச் சேர்ந்த கர்நாடக அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் நான்கு சகோதரர்களில் ஜர்கிஹோலியும் ஒருவர். முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அரசியலில் பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தில் அப்போதைய ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ் அங்கடி கோவிட் 19 பெருந்தொற்றால் கடந்த ஆண்டு காலமானார். அவர் இறந்ததைத் தொடர்ந்து அவரது பெலகாவி மக்களவைத் தொகுதி காலியானது.

இதில் ரமேஷ் ஜர்கிஹோலி போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், பாலியல் சிடி விவகாரம் விஸ்வரூபத்தை எடுத்துள்ளது. இந்த பாலியல் சிடி விவகாரத்தால், மாநிலத்தின் பல பகுதிகளில், இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நாளை தொடங்கவுள்ள மாநில சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தப் பாலியல் சிடி விவகாரத்தை பேரவையில் கிளப்ப எதிர்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இது பாஜகவுக்கு பெரும் தலைவலியாக மாறும் என்பதால் ஆளும் அரசு எச்சரிக்கையாக உள்ளது.

இதனிடையே, பெண்ணிடம் ரமேஷ் ஜர்கிஹோலி உரையாடுவதாக வெளியான ஆடியோவில், முதல்வர் எடியூரப்பா ஊழல்வாதி எனும் விதமாக கூறியிருப்பதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தும் எதிர்க்கட்சிகள் பேசத் தொடங்கியிருக்கின்றனர்.

2016 ஆம் ஆண்டில், அன்றைய முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடகாவில் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் வேலைவாங்கி தருவதாக கூறி பெண்ணுடன் இருந்த வீடியோ காட்சிகள் பரவியதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது காங்கிரஸ் அரசு கவிழ்க்கும் நிலைக்குச் செல்லப்பட்டது. இப்போது அதே போன்று ஒரு சிக்கலை எடியூரப்பா சந்திக்க இருக்கிறார். ஆட்சிக்கு சிக்கல் வராத பட்சத்திலும், வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல எதிர்ப்புகளை எடியூரப்பா சந்திக்க இருக்கிறார் என்பது மறுப்பதற்கில்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்