திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து இன்று நடைபெறவிருந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்வில்லை. இரட்டை இலக்க தொகுதிகளை விசிக எதிர்பார்க்கும் நிலையில் திமுக அதற்கு முன்வராததால் அதிருப்தி என தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் 11 நாட்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற உள்ளது. அதனடிப்படையில் இன்னும் ஒருவாரத்தில் தனது கூட்டணி
கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய திமுக திட்டமிட்டுள்ளது. நீண்ட நாட்களாக கூட்டணியில் உள்ள விசிக கட்சி, இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்க்கும் நிலையில், பேச்சுவார்த்தையில் இழுபறி என தகவல் வெளியாகியுள்ளது.
தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று
நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்