இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், ஆசிய கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை தக்கவைத்தது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறும் நிலையில், ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் போட்டி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறும் என கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு அனுமதி அளித்தால் மும்பையிலும் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே இங்கிலாந்தை வீழ்த்தி, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், ஜூன் மாதம் நடைபெறவிருந்த ஆசிய கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/30iql1Iஇந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், ஆசிய கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை தக்கவைத்தது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறும் நிலையில், ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் போட்டி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறும் என கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு அனுமதி அளித்தால் மும்பையிலும் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே இங்கிலாந்தை வீழ்த்தி, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், ஜூன் மாதம் நடைபெறவிருந்த ஆசிய கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்