Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு

கடந்த 8 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து நியூசிலாந்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

நியூசிலாந்தில், 8.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கடலோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பூகம்பத்தை உணராவிட்டாலும் யாரும் வீட்டில் தங்க வேண்டாம்; ஆபத்தான சுனாமி வரலாம் என்று தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடற்கரை பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. அங்கு சுனாமி எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டு உள்ளது.

image

காலை 8:28 மணிக்கு நியூசிலாந்து கடற்கரையிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆக்லாந்து, பே ஆப் பிளண்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 8 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. நிலநடுக்கத்தால் வடக்கு ஐஸ்லாந்தின் கிழக்குப் பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டதாகவும், அதுகுறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2OmwYxq

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்