அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள் வரை தற்போது நாங்கள் இறங்கி வந்துள்ளதாக தேமுதிகவின் பார்த்தசாரதி கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் தேமுதிக 40 தொகுதிகளுக்கு மேல் கேட்ட நிலையில், 15 தொகுதிகள் வரையே கொடுக்க அதிமுக முன் வந்தது. பல கட்டங்களான இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று மீண்டும் அதிமுக - தேமுதிக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுதொடர்பாக பேசிய தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி, “அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள் வரை தற்போது நாங்கள் இறங்கி வந்துள்ளோம். தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏதுமில்லை, எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை மட்டுமே உள்ளது. தொகுதி பங்கீட்டில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்” என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்