Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கிய இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்னை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று காலை சேப்பாக்கத்தில் பயிற்சிகளை தொடங்கியது.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்ட்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28ம் தேதி வரையும், கடைசி டெஸ்ட் மார்ச் 4 முதல் 8ம் தேதி வரை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புனேவிலும் நடைபெறவுள்ளன.

image

இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையில் டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு சென்னை வந்த இங்கிலாந்து அணியினர், கொரோனா தடுப்பு தனிமை முகாமில் இருந்தனர். மேலும், அனைவருக்கும் 3 கட்டங்களாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் வலைப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

image

இங்கிலாந்து வீரர்களுக்கு பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை வலைப் பயிற்சி மேற்கொள்ள நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்திய அணியினரும் கொரோனா தடுப்பு தனிமை முகாமை நிறைவு செய்த நிலையில், அவர்களுக்கும் 3 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் திங்கள்கிழமை மாலையில் சாதாரண பயிற்சியில் ஈடுபட்டனர். பின்பு இன்று காலை சேப்பாக்கம் மைதானம் வந்த அவர்கள் ரவி சாஸ்திரியின் தலைமையில் செவ்வாய்க்கிழமை வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2MGbXwR

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்