அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்பட எந்த பொறுப்பிலும் சசிகலா இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுகவை பொருத்தவரை ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம். மன்னிப்பு கோரினால் தினகரனை அதிமுகவில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கும் என்ற கருத்து அதிமுகவின் கருத்து அல்ல. அது கே.பி.முனுசாமியின் கருத்தாக இருக்கலாம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து அறிக்கை வாயிலாக வருவது மட்டுமே அதிகாரபூர்வ கட்சியின் கருத்து.
அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்பட எந்த பொறுப்பிலும் சசிகலா இல்லை. இரட்டை இலையை முடக்க நினைப்பவர்களை அதிமுகவினர் எப்படி ஏற்பார்கள்? இரட்டை இலையை முடக்க எந்த கொம்பனாலும் முடியாது. தனக்கு கிடைக்கவில்லை என்றால் கீழே போட்டு உடைத்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணம் நிறைவேறாது.
கட்சி விதிகளின்படி, கட்சியை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றாலோ, கட்சி மாறினாலோ, வேறு கட்சியை ஆதரித்தாலோ அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலக்கபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக மன்னிப்பு கோரினால் தினகரனை அதிமுகவில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்திருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3tdKV0Nஅதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்பட எந்த பொறுப்பிலும் சசிகலா இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுகவை பொருத்தவரை ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம். மன்னிப்பு கோரினால் தினகரனை அதிமுகவில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கும் என்ற கருத்து அதிமுகவின் கருத்து அல்ல. அது கே.பி.முனுசாமியின் கருத்தாக இருக்கலாம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து அறிக்கை வாயிலாக வருவது மட்டுமே அதிகாரபூர்வ கட்சியின் கருத்து.
அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்பட எந்த பொறுப்பிலும் சசிகலா இல்லை. இரட்டை இலையை முடக்க நினைப்பவர்களை அதிமுகவினர் எப்படி ஏற்பார்கள்? இரட்டை இலையை முடக்க எந்த கொம்பனாலும் முடியாது. தனக்கு கிடைக்கவில்லை என்றால் கீழே போட்டு உடைத்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணம் நிறைவேறாது.
கட்சி விதிகளின்படி, கட்சியை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றாலோ, கட்சி மாறினாலோ, வேறு கட்சியை ஆதரித்தாலோ அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலக்கபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக மன்னிப்பு கோரினால் தினகரனை அதிமுகவில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்திருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்