Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

"சசிகலாவுக்கு வரவேற்பளிக்க போலீஸ் அனுமதி; ஆனால்..."- தொண்டர்களை உஷார்ப்படுத்தும் தினகரன்

https://ift.tt/3cLJi4m

"சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதியளித்திருக்கிறது. பதற்றத்திலுள்ள சிலர் சதி செய்து உண்மைத் தொண்டர்கள் மீது பழி போட அனுமதிக்கக் கூடாது. எல்லா இடங்களிலும் கழகத்தினர் கவனமுடன் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்" என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சசிகலாவை வரவேற்க விழாக்கோலம் பூண்டு நீங்கள் செய்துவரும் ஏற்பாடுகளை பற்றிய செய்திகள் எல்லா ஊர்களிலும் இருந்து வந்த வண்ணமிருக்கின்றன. தமிழகம் முழுக்க தன்னிச்சையாக நடைபெறும் இந்த வரவேற்பு ஏற்பாடுகளை பார்த்து பதற்றமடைந்து இருக்கும் அதிகாரத்தில் இருக்கும் ஒரு சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரத்தை கையில் வைத்துள்ள அவர்களே மக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள். ‘எங்க அப்பன் குதிருக்குள் இல்லை’ என்று இவர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு படையெடுத்து கொண்டிருப்பதைப் பார்த்தால் திட்டமிட்டு ஏதாவது செய்துவிட்டு உண்மை தொண்டர்கள் மீது பழியைப் போடுவதற்கு சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்திருக்கிறது.

image

உள்ளார்ந்த அன்போடு அதிமுகவின் உண்மை தொண்டர்கள் உணர்வு ரீதியில் காட்டும் பாசம் எல்லாம் கூலிக்கு ஆட்களை திரட்டும் இவர்களுக்குப் புரியாது அதனால்தான் யாரால் அமைச்சர் பதவியில் இருக்கிறோம் என்பதையே பட்டவர்த்தனமாக மறந்துவிட்டு எதிர்க்கட்சியினர் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளில் சசிகலா மீது புழுதி வாரித் தூற்றி அதன்மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இழிவு படுத்துகிறார்கள் நான் பேசியதையும் திரித்துக் கூறி, நிதானமிழந்து அவதூறு செய்கிறார்கள்.

பதற்றத்தில் இருக்கும் இவர்கள் எத்தகைய பாவத்தையும் செய்திட துணிந்தவர்கள் என்பதால் சசிகலாவுக்கு நாம் அளிக்கும் வரவேற்பை மிகுந்த கவனத்தோடு அமைத்துக்கொள்ள வேண்டும்.

தமிழக எல்லையான அத்திப்பள்ளி இருந்து சென்னை இல்லம் வரை ராணுவ கட்டுப்பாட்டுடன் சாலையின் இரு மருங்கிலும் திரண்டு நின்று நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எந்தவித இடையூறும் இல்லாத வகையில் அதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் முறைப்படி கடைப்பிடித்திட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை உள்ளிட்ட இடங்களில சசிகலாவுக்கு நாம் அளிக்கும் வரவேற்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறை நமக்கு அனுமதி அளித்திருக்கிறது. காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து, சசிகலா தமிழகம் வருகிற நாளை ஒட்டுமொத்த தமிழக மக்களும் மகிழ்ந்து கொண்டாடுகிற நாடாக மாற்றுவோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் எதிரியான தீயசக்தி கூட்டத்தை தலையெடுக்க விடாமல் செய்கிற பணியை முழு வேகத்தோடு முன்னெடுத்திடுவோம்” என தெரிவித்தார் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்