ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றி வெற்றியை பெற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கும் மூலம் அறிவுறுத்தியுள்ளனர்.
நாளை மறுதினம் சசிகலா தமிழகம் வரும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஒற்றுமையோடு விழிப்புடன் தேர்தல் பணியாற்றி வெற்றியை ஈட்டுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
அதில், “அதிமுக அரசின் சாதனைகளை பிரசாரம், துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும். எத்தனை நூற்றாண்டு வந்தாலும் மக்களுக்காகவே அதிமுக இயங்கும் என ஜெயலலிதா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் அந்தக் கனவை நனவாக்கும் வகையில் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றி வெற்றியை பெற வேண்டும்” என ஓபிஎஸ் - ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்