இந்தியாவுக்குதான் வெற்றிக்கான அழுத்தம் அதிகம் என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன.
இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜோ ரூட் "ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றியுடன் களமிறங்கும் இந்திய அணியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். உணமையை சொல்ல வேண்டுமென்றால் எங்களை விட இந்தத் தொடரில் இந்தியாவுக்கே நெருக்கடி அதிகம். ஆஸ்திரேலியாவில் அண்மையில் பெற்ற வெற்றியும், சொந்த மண்ணில் அவர்களின் சாதனையுமே அதற்கு காரணம்" என்றார்.
மேலும் பேசிய அவர் "இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் இந்தியாவை வீழ்த்துவது சிரமம் என்பது தெரியும். ஆனால் நாங்கள் பயப்படவில்லை. இந்த 4 டெஸ்ட் போட்டிகளையும் வெல்வதற்கான ஐடியாக்களை வைத்திருக்கிறோம். அது நல்ல வேடிக்கையாக இருக்கும். ஒரு கேப்டனாக நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இங்கிலாந்து அணியில் 2012 இல் நுழைந்துபோது அந்த சிறப்பான தெடரில் என்னுடைய பங்கு இருந்தது" என்றார் .
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்