திமுகவிலிருந்து எப்போது எம்.ஜி.ஆர் பிரிந்தாரோ, அப்போதிலிருந்து அதிமுக - திமுக இரு கட்சிகளின் ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வருகிறது. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாவும் கருணாநிதியும் மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வந்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டுமே ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். இரு பெரும் ஆளுமைகள் இருக்கும்போதே அவர்களை எதிர்த்து அரசியலுக்கு வந்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவரின் உடல்நிலை, கட்சி நிர்வாகப் போக்குகள் முதலானவற்றின் காரணமாக தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் குறைந்துகொண்டே வருகிறது.
இது ஒருபுறமிருக்க, ஜெயலலிதா - கருணாநிதி மறைவிற்கு பிறகு தமிழகத்தில் வெற்றிடம் உருவாகிவிட்டதாக கூறி பலரும் அரசியலில் குதித்தனர். அதில், திடீரென எதிர்பாரத விதமாக நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து கட்சி தொடங்கி 4 ஆண்டுகாலமும் கடந்துவிட்டது. கமல்ஹாசன் தனது கட்சியான மக்கள் நீதி மய்யம், அதிமுக - திமுகவுக்கு மாற்று அணி என்று கூறி வருகிறார். மக்களில் ஒரு தரப்பும் மாற்று அரசியல் வேண்டும் என்று கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமலஹாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. சரத்குமாருடன் ஐஜேகே துணைப்பொதுச்செயலாளர் ரவிபாபுவும் சென்றிருந்தார். இதனால் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார் “இணைப்புக்கான முயற்சிதான். நல்லவர்கள் இணையலாம். நல்ல எண்ணம் கொண்டவர்கள் ஒன்றிணைந்தால் நன்றாக இருக்க வேண்டும். நல்லவர்கள், ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றாக இணையலாம். கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம். கமலஹாசனிடம் இருந்து நல்ல முடிவு வரும். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்தேன். யார் முதல்வர் வேட்பாளர் என்பதை விட வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும். விட்டுக்கொடுத்தால்தான் எதையும் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கிறேன். பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள். எதிர்கால சந்ததிகள் பாதிக்கபடும். காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். பணம் வாங்காதீர்கள். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்றால் இந்த பண அரசியல் ஒழிய வேண்டும். நான் ஒரு பத்தாண்டு காலம் அதிமுகவுடன் பயணித்துள்ளேன். அதிமுகவில் இருந்து கூட்டணி குறித்து யாரும் பேசாததால் அங்கிருந்து விலகினேன்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறுகையில், “மாற்றத்திற்கான கூட்டணி என்று ஏற்கெனவே அறிவித்தார்கள். மாற்றத்திற்கான கூட்டணி உண்மையாக உருவாகவேண்டுமென்றால் அதிமுக - திமுகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும். அதற்கான முயற்சியாக கூட இது இருக்கலாம். இந்தத் தேர்தலில் அதிக முதல்வர் வேட்பாளர்களை நான் பார்க்கிறேன். கமல், டிடிவி தினகரன் என அதிகமான முதல்வர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். சின்னங்களுக்கான ஆர்வம் குறைந்து வருகிறது. தலைவர்கள் கூட்டங்களை ஈர்க்கக்கூடிய வரிசையில் பலரும் இருக்கிறார்கள். சரத்குமார், கமல், டிடிவி தினகரன், பழ கருப்பையா அந்த வரிசையில் வருவார்கள்.
ஆயிரம் பூக்கள் மலரலாம். ஆனால் பூக்கள் ஒன்றோடு ஒன்று போட்டிபோடக்கூடாது. இது புதிய அடிக்கான வித்தாக கூட அமையலாம். கடந்த முறை மக்கள் நலக்கூட்டணி விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்வைத்தார்கள். பிரச்னையே அதிலிருந்துதான் ஆரம்பித்தது. ஈகோக்கள் தலைதூக்க ஆரம்பித்தது. அதற்கு பதிலாக அனைவரும் ஒரு குடையின் கீழ் திரள வேண்டும். வெற்றியை நோக்கிதான் பயணிக்க வேண்டும். முதல்வராக மாறி மாறி கூட ஆளலாம். அப்படி வந்தால்தான் தமிழக அரசியலில் சமன்செய்து சீர்பார்க்கும் அமைப்புகள் இருக்கும். ஒரு கட்சி மிகப்பெரிய பெரும்பான்மையோடு வெற்றி பெறுவது மக்களாட்சிக்கு நல்லது அல்ல. அதை தலைவர்கள் உணர வேண்டும்” என்றார்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் கூறுகையில், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதிமுகவும் திமுகவும் தங்களுடன் இருக்கும் கூட்டணிகளை உறுதபடுத்திக்கொள்ளும் கட்டாயத்தில் இருக்கின்றன. அந்த நிலையில் அவர்கள் முக்கியக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்கள் கட்சியில் இருக்கும் சிறிய கட்சிகளை கடைசியில் பார்த்துக்கொள்ளலாம் என்ற அணுகுமுறையை பின்பற்றுகிறார்கள். இல்லையென்றால் ஒரு சீட்டை கொடுத்து தங்கள் சின்னத்தில் போட்டியிட சொல்லலாம் என்று கணக்கிடுகிறார்கள். இப்படி அவர்கள் நடத்துவதால் சிறிய கட்சிகள் அவமதிப்பாகவும் கவுரவப் பிரச்னையாகவும் கருதுவதில் வியப்பில்லை.
அந்த வகையில்தான் சமகவும் ஐஜேகேவும் அதிருப்தி அடைந்துள்ளன. இவர்களுக்கு முன்னால் அதிருப்தியை வெளிப்படுத்தியது தேமுதிக. ஒரு சீட்டுக்காக அதிமுக - திமுகவுக்கு காத்திருக்காமல் மாற்று அணியை அணுகி கட்சியை வளர்க்க நினைக்கும் எண்ணம் வரவேற்கக்கூடியதுதான். அதன்படி மக்கள் நீதி மய்யம் தலைமையிலும் அமமுக தலைமையிலும் அணிகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய கட்சிகளின் சேர்க்கைகள் எந்த கட்சிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பதை தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3uAYibSதிமுகவிலிருந்து எப்போது எம்.ஜி.ஆர் பிரிந்தாரோ, அப்போதிலிருந்து அதிமுக - திமுக இரு கட்சிகளின் ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வருகிறது. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாவும் கருணாநிதியும் மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வந்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டுமே ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். இரு பெரும் ஆளுமைகள் இருக்கும்போதே அவர்களை எதிர்த்து அரசியலுக்கு வந்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவரின் உடல்நிலை, கட்சி நிர்வாகப் போக்குகள் முதலானவற்றின் காரணமாக தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் குறைந்துகொண்டே வருகிறது.
இது ஒருபுறமிருக்க, ஜெயலலிதா - கருணாநிதி மறைவிற்கு பிறகு தமிழகத்தில் வெற்றிடம் உருவாகிவிட்டதாக கூறி பலரும் அரசியலில் குதித்தனர். அதில், திடீரென எதிர்பாரத விதமாக நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து கட்சி தொடங்கி 4 ஆண்டுகாலமும் கடந்துவிட்டது. கமல்ஹாசன் தனது கட்சியான மக்கள் நீதி மய்யம், அதிமுக - திமுகவுக்கு மாற்று அணி என்று கூறி வருகிறார். மக்களில் ஒரு தரப்பும் மாற்று அரசியல் வேண்டும் என்று கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமலஹாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. சரத்குமாருடன் ஐஜேகே துணைப்பொதுச்செயலாளர் ரவிபாபுவும் சென்றிருந்தார். இதனால் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார் “இணைப்புக்கான முயற்சிதான். நல்லவர்கள் இணையலாம். நல்ல எண்ணம் கொண்டவர்கள் ஒன்றிணைந்தால் நன்றாக இருக்க வேண்டும். நல்லவர்கள், ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றாக இணையலாம். கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம். கமலஹாசனிடம் இருந்து நல்ல முடிவு வரும். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்தேன். யார் முதல்வர் வேட்பாளர் என்பதை விட வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும். விட்டுக்கொடுத்தால்தான் எதையும் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கிறேன். பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள். எதிர்கால சந்ததிகள் பாதிக்கபடும். காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். பணம் வாங்காதீர்கள். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்றால் இந்த பண அரசியல் ஒழிய வேண்டும். நான் ஒரு பத்தாண்டு காலம் அதிமுகவுடன் பயணித்துள்ளேன். அதிமுகவில் இருந்து கூட்டணி குறித்து யாரும் பேசாததால் அங்கிருந்து விலகினேன்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறுகையில், “மாற்றத்திற்கான கூட்டணி என்று ஏற்கெனவே அறிவித்தார்கள். மாற்றத்திற்கான கூட்டணி உண்மையாக உருவாகவேண்டுமென்றால் அதிமுக - திமுகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும். அதற்கான முயற்சியாக கூட இது இருக்கலாம். இந்தத் தேர்தலில் அதிக முதல்வர் வேட்பாளர்களை நான் பார்க்கிறேன். கமல், டிடிவி தினகரன் என அதிகமான முதல்வர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். சின்னங்களுக்கான ஆர்வம் குறைந்து வருகிறது. தலைவர்கள் கூட்டங்களை ஈர்க்கக்கூடிய வரிசையில் பலரும் இருக்கிறார்கள். சரத்குமார், கமல், டிடிவி தினகரன், பழ கருப்பையா அந்த வரிசையில் வருவார்கள்.
ஆயிரம் பூக்கள் மலரலாம். ஆனால் பூக்கள் ஒன்றோடு ஒன்று போட்டிபோடக்கூடாது. இது புதிய அடிக்கான வித்தாக கூட அமையலாம். கடந்த முறை மக்கள் நலக்கூட்டணி விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்வைத்தார்கள். பிரச்னையே அதிலிருந்துதான் ஆரம்பித்தது. ஈகோக்கள் தலைதூக்க ஆரம்பித்தது. அதற்கு பதிலாக அனைவரும் ஒரு குடையின் கீழ் திரள வேண்டும். வெற்றியை நோக்கிதான் பயணிக்க வேண்டும். முதல்வராக மாறி மாறி கூட ஆளலாம். அப்படி வந்தால்தான் தமிழக அரசியலில் சமன்செய்து சீர்பார்க்கும் அமைப்புகள் இருக்கும். ஒரு கட்சி மிகப்பெரிய பெரும்பான்மையோடு வெற்றி பெறுவது மக்களாட்சிக்கு நல்லது அல்ல. அதை தலைவர்கள் உணர வேண்டும்” என்றார்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் கூறுகையில், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதிமுகவும் திமுகவும் தங்களுடன் இருக்கும் கூட்டணிகளை உறுதபடுத்திக்கொள்ளும் கட்டாயத்தில் இருக்கின்றன. அந்த நிலையில் அவர்கள் முக்கியக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்கள் கட்சியில் இருக்கும் சிறிய கட்சிகளை கடைசியில் பார்த்துக்கொள்ளலாம் என்ற அணுகுமுறையை பின்பற்றுகிறார்கள். இல்லையென்றால் ஒரு சீட்டை கொடுத்து தங்கள் சின்னத்தில் போட்டியிட சொல்லலாம் என்று கணக்கிடுகிறார்கள். இப்படி அவர்கள் நடத்துவதால் சிறிய கட்சிகள் அவமதிப்பாகவும் கவுரவப் பிரச்னையாகவும் கருதுவதில் வியப்பில்லை.
அந்த வகையில்தான் சமகவும் ஐஜேகேவும் அதிருப்தி அடைந்துள்ளன. இவர்களுக்கு முன்னால் அதிருப்தியை வெளிப்படுத்தியது தேமுதிக. ஒரு சீட்டுக்காக அதிமுக - திமுகவுக்கு காத்திருக்காமல் மாற்று அணியை அணுகி கட்சியை வளர்க்க நினைக்கும் எண்ணம் வரவேற்கக்கூடியதுதான். அதன்படி மக்கள் நீதி மய்யம் தலைமையிலும் அமமுக தலைமையிலும் அணிகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய கட்சிகளின் சேர்க்கைகள் எந்த கட்சிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பதை தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்