இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இன்று சட்டப்பேரவை கூடுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை - கலைவாணர் அரங்கில் அவை கூடுகிறது. கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழுடன் வருவோர் மட்டுமே பங்கேற்பார்கள்.
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி கூட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். ஆளுநர் ஆங்கிலத்தில் வாசிக்கும் உரையை, அவைத்தலைவர் தனபால் தமிழில் வாசிப்பார். இதைத்தொடர்ந்து இன்றைய தின கூட்டம் ஒத்திவைக்கப்படும். பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அவை முன்னவரான ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்று, பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள்கள் நடத்துவதென முடிவு செய்வார்கள்.
வரும் 5 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நாள்களில் ஆளுநர் உரை மீது விவாதம் நடத்தப்பட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பு பேரவைக் கூட்டத்தொடரின்போது வெளியாக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3tjygJGஇந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்