சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில், ரஹானே, ரிஷப் பன்ட் ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றி இந்தியாவுக்கு பயம் காட்டி வருகிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
சென்னையில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா, ரிஷப் பன்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அரை சதத்தால் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 178 ரன்னுக்கு ஆல் ஆவுட் ஆனது.
இதனையடுத்து இந்தியாவுக்கு 420 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இந்தியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் போலவே இதிலும் ரோகித் சர்மா 12 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனையடுத்து சுப்மன் கில்லும், புஜாராவும் விக்கெட்டை இழக்காமல் விளையாடினர். இதில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் சுப்மன் கில் 15 ரன்களும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது.
இன்னும் 381 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியது இந்தியா. இதில் புஜாரா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். நிதானமாக விளையாடிய சுப்மன் கில் அரை சதமடித்தார். ஆனால் அவர் தொடர்ந்து நிலைக்கவில்லை. ஜேம்ஸ் ஆண்டர்ஸின் 'இன் ஸ்விங்' பந்துவீச்சுக்கு போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த துணைக் கேப்டன் ரஹானேவும் ஆண்டர்ஸன் பந்துவீச்சுக்கு போல்டாகி டக் அவுட்டானார். ரிஷப் பன்ட் விரைவாக ரன் சேர்ப்பார் என நினைத்திருந்தபோது 'ஸ்லோ பால்' வீசி அவரையும் அவுட்டாக்கினார் ஆண்டர்சன்.
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய சாதனைக்கு சொந்தக்காரர். இப்போது இந்தியாவின் 3 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இந்தியா இப்போது 5 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3q5KKCxசென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில், ரஹானே, ரிஷப் பன்ட் ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றி இந்தியாவுக்கு பயம் காட்டி வருகிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
சென்னையில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா, ரிஷப் பன்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அரை சதத்தால் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 178 ரன்னுக்கு ஆல் ஆவுட் ஆனது.
இதனையடுத்து இந்தியாவுக்கு 420 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இந்தியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் போலவே இதிலும் ரோகித் சர்மா 12 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனையடுத்து சுப்மன் கில்லும், புஜாராவும் விக்கெட்டை இழக்காமல் விளையாடினர். இதில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் சுப்மன் கில் 15 ரன்களும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது.
இன்னும் 381 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியது இந்தியா. இதில் புஜாரா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். நிதானமாக விளையாடிய சுப்மன் கில் அரை சதமடித்தார். ஆனால் அவர் தொடர்ந்து நிலைக்கவில்லை. ஜேம்ஸ் ஆண்டர்ஸின் 'இன் ஸ்விங்' பந்துவீச்சுக்கு போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த துணைக் கேப்டன் ரஹானேவும் ஆண்டர்ஸன் பந்துவீச்சுக்கு போல்டாகி டக் அவுட்டானார். ரிஷப் பன்ட் விரைவாக ரன் சேர்ப்பார் என நினைத்திருந்தபோது 'ஸ்லோ பால்' வீசி அவரையும் அவுட்டாக்கினார் ஆண்டர்சன்.
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய சாதனைக்கு சொந்தக்காரர். இப்போது இந்தியாவின் 3 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இந்தியா இப்போது 5 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்