விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் கணக்குகளை நீக்கும்படி ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போராட்டம் குறித்து பொய்யான மற்றும் ஆத்திரமூட்டும் தகவல்களை பரப்பியதாக 1,178 ட்விட்டர் கணக்குகளை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த 1,178 பயனர்களும் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
எனினும் மத்திய அரசின் உத்தரவுக்கு ட்விட்டர் நிறுவனம் இதுவரை முழுவதுமாக இணங்கவில்லை எனக் கூறப்படுகிறது. மத்திய அரசின் உத்தரவு தொடர்பாக ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ட்விட்டர் நிறுவனம் 'வெளிப்படைத்தன்மை மற்றும் பொது உரையாடலை மேம்படுத்துதல்' கொள்கைகளால் வழிநடத்தப்படுகிறது.
பொதுவாக ட்விட்டர் கணக்குகளையோ, பதிவுகளையோ நீக்குவதற்கு அரசிடமிருந்து சட்ட ரீதியான உத்தரவு வரும்போது, ட்விட்டரின் கொள்கை விதிகள் மற்றும் உள்நாட்டுச் சட்டம் ஆகிய இரண்டு அம்சங்களின் கீழ் மதிப்பாய்வு செய்கிறோம். உள்ளடக்கம் ட்விட்டரின் விதிகளை மீறினால், நிச்சயம் அது நீக்கப்படும். உள்ளடக்கம் ட்விட்டர் விதிகளை மீறுவதாக இல்லாவிட்டாலும் அதிகார வரம்பில் அது சட்டவிரோதமானது என்று தீர்மானிக்கப்பட்டால் அப்போதும் நீக்கப்படும்’’ என்று கூறினார்.
இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி 31-ம் தேதி, இதே காரணங்களுக்காக மத்திய அரசின் உத்தரவுப்படி 257 கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. ஆனால் சிலமணி நேரத்துக்கு பிறகு இந்த முடக்கத்தை ட்விட்டர் தன்னிச்சையாக நீக்கியது. விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் சிலர் அண்மையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர். இந்தக் கருத்துகளுக்கு ட்விட்டர் நிறுவனத்தின் சர்வதேச தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி ‘லைக்’ செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3jtcMWcவிவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் கணக்குகளை நீக்கும்படி ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போராட்டம் குறித்து பொய்யான மற்றும் ஆத்திரமூட்டும் தகவல்களை பரப்பியதாக 1,178 ட்விட்டர் கணக்குகளை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த 1,178 பயனர்களும் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
எனினும் மத்திய அரசின் உத்தரவுக்கு ட்விட்டர் நிறுவனம் இதுவரை முழுவதுமாக இணங்கவில்லை எனக் கூறப்படுகிறது. மத்திய அரசின் உத்தரவு தொடர்பாக ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ட்விட்டர் நிறுவனம் 'வெளிப்படைத்தன்மை மற்றும் பொது உரையாடலை மேம்படுத்துதல்' கொள்கைகளால் வழிநடத்தப்படுகிறது.
பொதுவாக ட்விட்டர் கணக்குகளையோ, பதிவுகளையோ நீக்குவதற்கு அரசிடமிருந்து சட்ட ரீதியான உத்தரவு வரும்போது, ட்விட்டரின் கொள்கை விதிகள் மற்றும் உள்நாட்டுச் சட்டம் ஆகிய இரண்டு அம்சங்களின் கீழ் மதிப்பாய்வு செய்கிறோம். உள்ளடக்கம் ட்விட்டரின் விதிகளை மீறினால், நிச்சயம் அது நீக்கப்படும். உள்ளடக்கம் ட்விட்டர் விதிகளை மீறுவதாக இல்லாவிட்டாலும் அதிகார வரம்பில் அது சட்டவிரோதமானது என்று தீர்மானிக்கப்பட்டால் அப்போதும் நீக்கப்படும்’’ என்று கூறினார்.
இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி 31-ம் தேதி, இதே காரணங்களுக்காக மத்திய அரசின் உத்தரவுப்படி 257 கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. ஆனால் சிலமணி நேரத்துக்கு பிறகு இந்த முடக்கத்தை ட்விட்டர் தன்னிச்சையாக நீக்கியது. விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் சிலர் அண்மையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர். இந்தக் கருத்துகளுக்கு ட்விட்டர் நிறுவனத்தின் சர்வதேச தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி ‘லைக்’ செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்