Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா.. தொடரும் மழை.. சில தலைப்புச் செய்திகள்!

வருகிற 13ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகம். முன்களப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.

கொரோனா தடுப்பூசியை தடங்கல் ஏதுமின்றி விநியோகிக்க உறுதி ஏற்றுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் கூட்டறிக்கை. மக்களின் உயிர் காப்பது ஒன்றே தங்கள் முழுமுதல் நோக்கம் என்றும் உறுதி

திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிப்பதற்கு வலுக்கும் எதிர்ப்பு. முடிவை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசை வலியுறுத்தும் மருத்துவர்கள்.

பள்ளிகளை திறப்பது தொடர்பாக இன்று முதல் கருத்துக் கேட்புக் கூட்டம். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்கின்றனர்.

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இரண்டு நீதிபதிகள் அனுமதி அளித்து தீர்ப்பு.

குடியரசு தின விழாவில் பங்கேற்க இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து. உருமாறிய கொரோனாவால் பிரிட்டனில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பயணம் தவிர்ப்பு.

சென்னையில் இரவு பத்துமணி வரை நீடித்த மழை. செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடரும். வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

தை பூசத்தையொட்டி ஜனவரி 28 ஆம் தேதி பொதுவிடுமுறை அளித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு. இனி வரும் ஆண்டுகளிலும் பொதுவிடுமுறை பட்டியலில் சேர்க்க ஆணை.

பறவைக்காய்ச்சல் மாநில பேரிடராக அறிவிக்கப்பட்ட நிலையில் கேரளாவில் 50 ஆயிரம் வாத்து, கோழிகளை அழிக்கும் பணி தீவிரம். மனிதர்களுக்கும் பரவும் என்பதால் எல்லைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பேட்டி.

ஜெர்மனியில் ஊரடங்கு மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு. அசாதாரணமான சூழலை எதிர்கொண்டிருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கருத்து.

பிரிட்டனில் முதல் முறையாக ஒரே நாளில் 60,000திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று. தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மீண்டும் அமல்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2XdZd2z

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்