தொடர் விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த காரணங்களால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்றிரவு மக்கள் கூட்டம் அலைமோதியது. போதிய பேருந்துகள் இல்லாத நிலையில் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வார விடுமுறை, குடியரசு தினம் போன்ற தொடர்ச்சியான விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்காக ஏராளமானோர் நேற்றிரவு கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். வாரஇறுதி நாட்களுக்கான அட்டவணைப் படி பேருந்துகள் இயக்கப்பட்டதால் பெருந்திரளாக வந்த மக்கள் மாலை 6 மணிக்கு மேல் பேருந்துகளின்றி சிரமப்பட்டனர்

இதனால் பயணிகள் பலர் 4 மணி நேரத்திற்கு மேல் பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய தகவல் அளிக்காத நிலையில், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே சென்ற பேருந்துகளை பயணிகள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது. போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2KNPz4c

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்