பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து அவர் ராஞ்சியிலுள்ள மருத்துவமனையிலிருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ள லாலு பிரசாத்துக்கு பல்வேறு உடல் உபாதைகள் உள்ளன. இதனால் அவர் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக மூச்சுத் திணறலாலும் நிமோனியா காய்ச்சலாலும் அவதிப்பட்ட நிலையில் லாலுவின் உடல் நிலை மோசமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம், ராஞ்சியிலிருந்து டெல்லி கொண்டுவரப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 72 வயதான லாலுவின் உடல்நிலை கவலை தரும் வகையில் இருப்பதாக அவரது மகன் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/39bFqaM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்