Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

"இது நம்ம இன்னிங்ஸ்" - சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்

https://ift.tt/3pfaMD9

சென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல்முறை வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக வாஷிங்டன் சுந்தரை சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது. முதல்முறை வாக்காளரான வாஷிங்டன் சுந்தர், இளம் வாக்காளர்கள் தேர்தலில் பங்களிப்பை செலுத்த ஊக்கமாக இருப்பார் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சியின் டிவிட்டர் பக்கத்தில், "இது நம்ம இன்னிங்ஸ்" என்ற ஹாஷ்டேக் மூலம் வாஷிங்டன் சுந்தர் நியமனம் தொடர்பாக வீடியோவுடன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்துக்கு பிறகு சொந்த ஊரான சென்னைக்கு திரும்பிய வாஷிங்டன் சுந்தர், தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். குறிப்பிட்ட நாள் தனிமைக்கு பின்னர் சென்னை முழுவதும் இளம் வாக்காளர்களை கவர நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் வாஷிங்டன் சுந்தர் ஆன்லைன் மூலம் பங்கேற்க உள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்