கொரோனா தடுப்பூசி பணிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சென்னை வந்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இந்நிலையில் சென்னை வந்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பெரியமேடு பகுதியில் உள்ள மத்திய மருந்து பகுப்பு ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா்.
இதையடுத்து தடுப்பூசி ஒத்திகைப் பணிகளையும் பார்வையிடுகிறார். பின்னர் செங்கல்பட்டு செல்லும் அமைச்சர், அங்குள்ள தடுப்பூசி மையத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். சென்னை திரும்பும் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேசுவார் எனக் கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2LafEucகொரோனா தடுப்பூசி பணிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சென்னை வந்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இந்நிலையில் சென்னை வந்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பெரியமேடு பகுதியில் உள்ள மத்திய மருந்து பகுப்பு ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா்.
இதையடுத்து தடுப்பூசி ஒத்திகைப் பணிகளையும் பார்வையிடுகிறார். பின்னர் செங்கல்பட்டு செல்லும் அமைச்சர், அங்குள்ள தடுப்பூசி மையத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். சென்னை திரும்பும் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேசுவார் எனக் கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்