தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை. தடுப்பூசி மருந்து விநியோகம் தொடங்கும் நிலையில் சென்னையில் நேரில் ஆய்வு செய்கிறார் மத்திய அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.
அஞ்சல்துறை தேர்வில் தமிழ் மீண்டும் புறக்கணிப்பு. தமிழுக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்த நிலையில் தேர்வர்கள் ஏமாற்றம்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை. உடன்பாடு ஏற்படாவிட்டால் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி நடத்த ஒத்திகை என விவசாயிகள் அறிவிப்பு.
15ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு. விருத்தாசலம் அருகே தரைப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு.
தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்கலாம் என 70 சதவிகித பெற்றோர் கருத்து தெரிவித்ததாக பள்ளிக் கல்வி துறை தகவல். விரைவில் முடிவெடுக்கிறது தமிழக அரசு.
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நிபந்தனைகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேராக விவாதிக்கத் தயார் என ஸ்டாலின் அறிவிப்பு. வழக்கை வாபஸ் பெற்றால்தான் விவாதிக்க வருவேன் என ஸ்டாலின் கூறுவதாக முதல்வர் பேச்சு.
வரும் 27ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்பு. வருமான வரி தொடர்பான வழக்கு விசாரணையின் போது சசிகலா தரப்பு உயர் நீதிமன்றத்தில் தகவல்.
குடிநீருக்கு பதில் நச்சுத்தன்மை வாய்ந்த திரவத்தை கொடுத்ததாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் புகார். ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி இன்று போராட்டம் அறிவித்துள்ள நிலையில் பரபரப்பு.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் சமூக வலைதள கணக்குகள் முடக்கம். பேஸ் புக், ட்விட்டர் நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கை. இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி. 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3bhgCPZதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை. தடுப்பூசி மருந்து விநியோகம் தொடங்கும் நிலையில் சென்னையில் நேரில் ஆய்வு செய்கிறார் மத்திய அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.
அஞ்சல்துறை தேர்வில் தமிழ் மீண்டும் புறக்கணிப்பு. தமிழுக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்த நிலையில் தேர்வர்கள் ஏமாற்றம்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை. உடன்பாடு ஏற்படாவிட்டால் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி நடத்த ஒத்திகை என விவசாயிகள் அறிவிப்பு.
15ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு. விருத்தாசலம் அருகே தரைப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு.
தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்கலாம் என 70 சதவிகித பெற்றோர் கருத்து தெரிவித்ததாக பள்ளிக் கல்வி துறை தகவல். விரைவில் முடிவெடுக்கிறது தமிழக அரசு.
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நிபந்தனைகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேராக விவாதிக்கத் தயார் என ஸ்டாலின் அறிவிப்பு. வழக்கை வாபஸ் பெற்றால்தான் விவாதிக்க வருவேன் என ஸ்டாலின் கூறுவதாக முதல்வர் பேச்சு.
வரும் 27ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்பு. வருமான வரி தொடர்பான வழக்கு விசாரணையின் போது சசிகலா தரப்பு உயர் நீதிமன்றத்தில் தகவல்.
குடிநீருக்கு பதில் நச்சுத்தன்மை வாய்ந்த திரவத்தை கொடுத்ததாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் புகார். ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி இன்று போராட்டம் அறிவித்துள்ள நிலையில் பரபரப்பு.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் சமூக வலைதள கணக்குகள் முடக்கம். பேஸ் புக், ட்விட்டர் நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கை. இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி. 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்