Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்காத நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், திமுகவில் இணைந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்த நிலையில், தனது உடல்நிலை காரணமாக அந்த முடிவை கைவிடுவதாக அண்மையில் அறிவித்தார்.

ரஜினிகாந்த் பின்வாங்கிய நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், திமுகவில் இணைந்தனர். ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் கணேசன் ஆகியோர், திமுக தலைமையகமான சென்னை - அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/35Odl7m

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்